பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் என்றாலே நினைவுக்கு வருவது அவரது முன்னாள் காதலி பிபாஷா பாசு தான். காதலர்களாக இருந்த இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் தற்போது திருமணம் குறித்து கேட்டாலே, ஜான் ஆப்ரஹாம் உஷாராகிவிடுகிறார்.
தனிப்பட்ட முறையில் பிபாஷா பாசு குறித்து எந்த கேள்விகளும் கேட்க வேண்டாம் என்று துவக்கத்திலேயே 'ஜகா' வாங்கி கொள்கிறார் ஜான். 'நிரா' என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஜான் ஆப்ரஹாமிடம் நைசாக கேள்விகளை கேட்டோம். சமீபத்தில் முதலீட்டு வங்கியாளரான பிரியா ரஞ்சல் என்பவரை, ஜான் ஆப்ரஹாம் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் பரவியது.
இது குறித்து ஜானிடம் கேட்ட போது, அது நடக்கும் போது நடக்கும். ஆனால் தற்போது திருமணத்திற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. தற்போதைக்கு எனது பெற்றோருடன் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறேன் என்றார்.
கடந்த ஜனவரி மாதத்திலேயே நீங்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி பரவி வருகிறதே என்று கேட்டதற்கு, அது ஒரு பொய்யான தகவல். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் திருமணம் செய்திருந்தால், அதற்கேற்ப நடந்து கொள்வேன். எனது திருமணத்தை யாராவது கனவு கண்டிருப்பார்கள் என்றார்.
பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்களில் நடித்து வருவது குறித்து கேட்ட போது, நான் மக்களில் ஒருவனாக உள்ளேன். பலருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இதனால் தான் பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்களில் நடிக்க நான் ஒப்பு கொள்கிறேன் என்றார்.
Post a Comment