பாலகிருஷ்ணாவை வயசான ஹீரோ என்று கூறி நடிக்க மறுத்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் அழைப்பு வந்ததாம். ஆனால் அவர் வயதானவர் என்பதால் காஜல் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தான் இப்படி கூறவே இல்லை என்று காஜல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பொதுவாக கிசுகிசுக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் இந்த செய்தி விஷமத்தனமானது.
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளேன். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வயதானவர் என்பதால் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்ததாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. என்னிடம் கால்ஷீட் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்காலத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்," என்றார்.
தமிழில் காஜல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் பெரிய படம் துப்பாக்கி.
Post a Comment