நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும், நடிகை ஸ்ருதிஹாசனின் தாயாருமான சரிகா, விக்ரம், ஜீவா இணைந்து மிரட்டும் டேவிட் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளாராம்.
சரிகா இப்போது அவ்வளவாக நடிப்பதில்லை. இந்த நிலையில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் டேவிட் படத்தில் அவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜீவா தவிர தபு, லாரா தத்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில்தான் சரிகாவின் ஐட்டம் ஆட்டம் இடம் பெறுகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சரிகாவை அணுகினார் இயக்குநர் பிஜோய் நம்பியார். ஆனால் அதை சரிகா ஏற்கவில்லை. இதையடுத்து அந்த ரோல் லாரா தத்தாவிடம் போய் விட்டது. இருப்பினும் ஐட்டம் பாட்டுக்கு ஆடக் கேட்டபோது உடனே ஒகே சொல்லி விட்டாராம் சரிகா.
தம் தம் மஸ்த் கலாந்தர் என்று ஆரம்பிக்கும் இப்பாடல் பழைய சுபி கவ்வாலி ரக ரீமிக்ஸ் பாடலாகும். இதை அந்தக் காலத்துப் பின்னணியில், கருப்பு வெள்ளையில் படமாக்கியுள்ளனராம்.
இந்தப் பாடலை வெறுமனே ஆடி விட்டுப் போகாமல் அந்த நடன வடிவமைப்பிலும் கூட சரிகா உதவினாராம். இந்த வகை நடனத்தில் சரிகா கைதேர்ந்தவர் என்பதால் நுனுக்கமான பலதகவல்களைச் சொல்லி அந்த நடனத்திற்கும், பாடலுக்கும் புது மெருகேற்றினாராம்.
Post a Comment