அகிலா.. மீண்டும் இயக்குநராக களமிறங்கிய ஆர்.கே.செல்வமணி!

|

Rk Selvamani Directs Akila

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார் ஆர்கே செல்வமணி. அகிலா என்ற படத்தை இயக்குகிறார்.

புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என ஒரு காலத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் செல்வமணி. பின்னர் அவரது படங்கள் எடுபடமாமல் போய்விட்டன.

சில ஆண்டுகளுக்கு முன் பிரசாந்தை வைத்து புலன் விசாரணை 2 என்ற படத்தை எடுத்தார். ஆனால் அது இன்று வரை திரையைத் தொடவே இல்லை.

இந்த நிலையில் அகிலா என்ற புதிய படத்தை இப்போது அறிவித்துள்ளார்.

ஸ்ரீமகாலட்சுமி என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பி ஆனந்தன், ஆர்த்திக், நரேன், ஹீதாஷா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தீவிரவாதத்துக்கு எதிரான படமாக அகிலாவை உருவாக்கியுள்ளார் செல்வமணி. புரட்சி என்ற பெயரில் மக்களைத் தூண்டிவிட்டு, தீவிரவாதத்தை வளர்க்கும் எந்த அமைப்பும் ஜெயித்ததில்லை என்பதுதான் கதையின் கரு.

ஆதித்யன் இசையமைத்துள்ளார்.

சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி, அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளாராம்!

 

Post a Comment