அதர்வாவின் "பரதேசி" கெட்டப்

|

Atharava's 'Paradesi' First Look

தேசிய விருது வென்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'பரதேசி'. அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்தது. தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. இதனையடுத்து பாலா, படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்நிலையில் பட ஷூட்டிங் முடியும் வரை பட ஸ்டில்ஸை வெளியடாத பாலா, தற்போது ஸ்டில்களை வெளியிட்டுயிருக்கிறார். அதில் அதர்வா, சாக் பையை சட்டையாக போட்டுக் கொண்டு, ஒர விதமான முடி கட்டுடன் இருக்கிறார். முப்பொழுதும் உன் கற்பனை படத்தில் மிகவும் அழகாக இருந்த அதர்வா இது என்ற அளவுக்கு இருக்கிறது அவரது கெட்டப். கெட்டப் எப்படியிருந்தாலும்இ பாலா படத்தில் நடித்தால் நடிப்பு சூப்பராக வந்து விடும் என்பது தான் உண்மை.. இந்த படம் நிச்சியம் தமிழ் சினிமாவிற்கு நல்ல பெயரை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
 

Post a Comment