கிசு கிசு - லீக்கான நடிகையின் சீக்ரெட்

|

Kodampakkam Kodangi

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

அலை ஓயாத நடிகர் தன்னோட மூத்த வாரிச மணியான இயக்கம் மூலமா அறிமுகப்படுத்துறாரு.  இதுக்கிடைல அவரோட இளைய வாரிசுக்கும் வாய்ப்பு தேடி வருதாம். அக்னி ஸ்டார் படத்த ரீமேக் பண்றதா ஒரு இயக்கம் வந்து கால்ஷீட் கேட்டாராம். அந்த படத்தெல்லாம் உங்களால எடுக்க முடியாதுன்னு இளயவாரிசு நடிக்கறதுக்கு ஓயாத நடிகரு, பர்மிஷன் தரலயாம். ஆனாலும் இயக்கம் முயற்சிய கைவிடாம அலைஞ்சிட்டிருக்காராம்... அலைஞ்சிட்டிருக்காராம்...

யாரோ சூனியம் வெச்சதாலதான் உடம்பு பாதிச்சிடுச்சுன்னு சொல்லி சமந்த நடிகை மந்திரவாதிகிட்ட போனாரு. இந்த விஷயத்த சீக்ரெட்டா வெச்சிக்க சொல்லி மந்திரவாதிகிட்ட சொன்னாராம். ஆனா எப்படியோ விஷயம் லீக் ஆகி மீடியாவுக்கு தெரிஞ்சிடுச்சாம். யாரு சொல்லி மேட்டர் லீக் ஆச்சுன்னு விசாரிச்சப்போ, மந்திரவாதிக்கு தட்சணைய ஒரு பட நிறுவனம்தான் கொடுத்துச்சாம். ஷூட்டிங்கிற்கு தேதி கொடுக்கணும்னா, அந்த மந்திரவாதிக்கு செட்டில் பண்ணிடுங்கன்னு நடிகை உத்தரவு போட்டாராம். அதுல அந்த நிறுவனம் தட்சணைய கொடுத்ததாம். இந்த மேட்டர் பட யூனிட்டாருக்கு தெரியவர அப்படியே ஊரெல்லாம் பரவிடுச்சாம்... பரவிடுச்சாம்...

அஜந்தமான பேர்ல படம் தயாரிக்க வந்தவரு திடீர்ன்னு இயக்கமாயிட்டாரு. படத்தோட ஒரிஜினல் இயக்குனர் பேர நீக்கிட்டு இவரே பேரை போட்டுக்கிட்டாருன்னு புகார் போச்சு. இதயடுத்து நீக்கின இயக்கத்தோட பேரயும் தன் பேரோடு சேத்துபோட்டுருக்காராம். கணக்கு பாக்குற வேலல சம்பாதிச்ச பணத்த படத்துல இன்வெஸ்ட் பண்ணவருக்கு இப்ப கையில ஒரு பைசா கூட மிஞ்சலையாம். இதனால படத்த வாங்குறதுக்கு யாராவது கம்பெனிகாருங்க வருவாங்களான்னு காத்துகிடக்கிறாராம்... காத்து கிடக்கிறாராம்...
 

Post a Comment