யுவன் வாய்ப்பைப் பறித்த தேவி ஸ்ரீபிரசாத்!!

|

Dsp Compose Ajith Movie The First Time

அஜீத் படம் என்றாலே யுவன் சங்கர் ராஜாதான் இசை என்பது எழுதப்படாத விதி. இப்போது அதில் ஒரு மாற்றம்.

இந்த முறை அஜீத்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கப் போகிறவர் யுவன் சங்கர் ராஜா அல்ல. தேவி ஸ்ரீ பிரசாத்!!

அஜீத்தும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைவது இதுதான் முதல் முறை.

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்றுதான் அறிவித்திருந்தனர். பின்னர் என்ன நடந்ததோ... கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

இப்போது அவரும் இல்லை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் இயக்குநரை தொடர்ந்து நச்சரித்து இந்த வாய்ப்பை தேவி ஸ்ரீ பிரசாத் பெற்றதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.

இதுகுறித்து இயக்குநர் சிறுத்தை சிவா கூறுகையில், "விரைவில் அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறோம்," என்றார்.

 

Post a Comment