சினிமா பைனான்சியரான முகன்சந்த் போத்ரா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: 20 வருடங்களாக பைனான்சியராக உள்ளேன். ரத்தின கற்கள் மதிப்பீடு செய்யும் தொழிலும் செய்கிறேன். இயக்குனர் கஸ்தூரி ராஜா பல மாதங்களுக்கு முன்னர் என்னிடம் பல தவணைகளில் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். தான் பணம் திருப்பித் தராத பட்சத்தில் தன் சம்பந்தி ரஜினி அல்லது மகன்கள் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் தருவார்கள் என்று உறுதி சான்றிதழ் எழுதி கொடுத்தார். ஆனால், உறுதி அளித்தபடி கஸ்தூரிராஜா பணத்தை திரும்ப தரவில்லை. பின்னர், ஒரு செக் கொடுத்தார். ஆனால், அதில், போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டது. இந்த தகவலை தெரிவித்து பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, என்னை ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment