'கரீனா - சயீப் கல்யாணம் செல்லாது செல்லாது' - முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

|

Darul Uloom Labels Saif Kareena Marriage

மும்பை: மதம் மாறாத கரீனாவை சயீப் அலிகான் திருமணம் செய்தது முஸ்லிம் மத சட்டப்படி செல்லாது என்று இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் அறிவித்துள்ளது.

முதல் மனைவி அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்த சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை 5 ஆண்டுகள் காதலித்தார். சில தினங்களுக்கு முன்புதான் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது.

கரீனா கபூர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். சயீப் அலிகான் முஸ்லிம். ஆனால் இந்து முறைப்படி கரீனாவுக்கு தாலி கட்டிதான் சயீப் திருமணம் செய்தார்.

கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறவில்லை. எனவே முன்னணி இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் இந்த திருமணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சயீப் அலிகான்-கரீனா கபூர் திருமணம் முஸ்லிம் மத சட்டத்துக்கு விரோதமானது. திருமணத்துக்கு முன் கரீனா கபூர் முஸ்லிம் மதத்துக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அவர் மதம் மாறவில்லை. எனவே இந்த திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்காது, என்று குறிப்பிட்டுள்ளது.

 

Post a Comment