நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு விஜய் டிவியில் ‘கோலிவுட் கிங்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இன்றுமுதல் சனிக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ‘கோலிவுட் கிங்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சென்னை 600028 திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தமிழ் திரை உலகில் பிஸியான இயக்குநராக இருந்து வருகிறார். சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்களுக்குப் பின்னர் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி' படத்தில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு தற்போது விஜய் டிவியில் ‘கோலிவுட் கிங்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். ஒவ்வொரு வாரமும் பிரபல நட்சத்திரங்களின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களிடம் அந்த ஹீரோவைப் பற்றிய, அவர் நடித்த திரைப்படங்களைப்பற்றிய கேள்விகள் கேட்கப்படும். அவர்களில் சரியான பதில்களை சொல்பவர்கள் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அவர்களுக்கான பரிசுத்தொகையும் அதிகமாகிக் கொண்டே செல்லும். இறுதியில் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை சரியாகச்சொல்லும் ஒரு ரசிகர் அந்த வாரத்தின் `கோலிவுட் கிங்'காக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சினிமாவைப் பற்றிய நிகழ்ச்சி என்பதாலும், வெங்கட் பிரபு தொகுத்து வழங்குவதாலும் நிகழ்ச்சி கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விஜய் டிவியில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘கோலிவுட் கிங்'
Post a Comment