காசி குப்பம் பாடல் வெளியீடு

|

'Kaasi Kuppam' songs release

பாலமுருகன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், 'காசி குப்பம்'. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளுடன் ஹீரோவாக நடிக்கிறார் அருண். கீர்த்தி சாவ்லா, சவும்யா ஹீரோயின்கள். மற்றும் 'ஆடுகளம்' நரேன், லிவிங்ஸ்டன், ரமா, நெல்லை சிவா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிஞ்சலா ஷாம். இசை, டி.பி.பாலாஜி. பாடல்கள்: தமிழமுதன், சுரேகா. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிறகு படம் பற்றி நிருபர்களிடம் அருண் கூறும்போது, ''விளிம்புநிலைப் பகுதி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு தீமைகள் செய்கிறான் ஓர் அரசியல்வாதி. அவனுடைய முகத்திரையை காசி குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் எப்படி கிழித்தெறிகிறான் என்பது கதை" என்றார்.
 

Post a Comment