காக்ரோச்சைக் காப்பியடித்தேனா? - செம கடுப்பில் ராஜமவுலி

|

I M Not Copycat Says Rajamoli

நான் ஈ படம் படம் தமிழில் பெற்ற வரவேற்பும், வசூலும் அதைத் தொடர்ந்து ராஜமவுலிக்கு இங்கு கிடைத்துள்ள மவுசும், அப்படியே டமாலென சரியும் அளவுக்கு ஒரு மேட்டர்...

நான் ஈயை அவர் சுட்டது காக்ரோச் என்ற குறும்படத்திலிருந்து என் தகவல் வெளியானதிலிருந்து உலகமகா கடுப்பில் இருக்கிறார் மனிதர்.

இந்த காக்ரோச் வெளியானது கடந்த 2010 மார்ச் மாதத்தில். ஒரு ரஷ்ய இயக்குநர் உருவாக்கிய படம் இது. இதைத்தான் அப்படியே தழுவி எடுத்து நான் ஈ-யாக்கி விட்டாராம் ராஜமவுலி.

நான் ஈயில் வருவதைப் போலவே, ஹீரோ ஒரு பெண்ணைக் காதலித்து திருமணத்துக்கு முன்பே விபத்தில் இறந்துவிடுகிறா். உடனே கரப்பான் பூச்சியாக மறுபிறவி எடுத்து, காதலிக்காக ஏங்குவது காக்ரோச்சின் கதை.

இந்தக் கதையில் ஒரு வில்லனைப் புகுத்தியிருப்பது மட்டுமே ராஜமவுலியின் சாதனை என மீடியாவில் செய்தி பறக்க, ராஜமவுலி ஏக அப்செட்.

ஆனால் இவற்றையெல்லாம் மறுத்துள்ள ராஜமவுலி, தான் காக்ரோச் படத்தைப் பார்க்கவே இல்லை என்றும், வில்லனால் பழிவாங்கப்படும் ஒருவன் நாயாகப் பிறந்து பழிவாங்கும் ஒரு அனிமேஷனை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தப் படத்தை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

சரி விடுங்கப்பா... அவனவன் போஸ்டரையே காப்பியடிக்கிறான்... இதுல யாரை நொந்து என்ன பிரயோசனம்!

 

Post a Comment