எஸ்.எஸ்.ராஜமவுலி தெலுங்கில் இயக்கி ஹிட்டான படம், 'மரியாத ராமண்ணா'. தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஹீரோவாகவும் சலோனி ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த படம் இந்தியில் 'சன் ஆஃப் சர்தார்' என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. அஜய்தேவகன், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். கன்னடம், பெங்காலி மொழிகளிலும் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிவிபி நிறுவனம் வாங்கி உள்ளது. தமிழில் ஆர்.கண்ணன் இதை ரீமேக் செய்கிறார். சுனில் நடித்த கேரக்டரில் சந்தானம் நடிப்பார் என்று தெரிகிறது. மற்ற நடிகர், நடிகைகள் யாரும் முடிவாகவில்லை. ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
Post a Comment