டெல்லி: கரீனா கபூர் - சயீப் அலிகான் திருமணம்தான் இன்றைக்கு ஹாட் டாபிக்காகிவிட்டது.
நாட்டின் அத்தனை விவிஐபிக்களையும் திருமணத்துக்கு அழைத்துள்ளனர். இதில் முக்கியமானவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரணாப், நிச்சயம் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த திருமணத்துக்காக பட்டோடி அரண்மனை பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும், டெல்லியிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
பாரம்பரியமிக்க அரண்மனை நகைகள் தவிர, பல கோடி ரூபாய்க்கு புதிய நகைகள் வாங்கியுள்ளனர் கரீனாவுக்காக. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரிதுகுமார்தான் முகூர்த்த சேலையை தயார் செய்து வருகிறார்.
திருமணத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.
சயீப்பின் தாயார் சர்மிளா தாகூர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியிடம் திருமண அழைப்பிதழை நேரில் கொடுத்து அழைப்பு விடுத்தார்.
அவரும் திருமணத்துக்கு வருவதாக உறுதி அளித்துள்ளராம். பிரணாப் முகர்ஜியும், மன்சூர் அலிகான் பட்டோடியும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டோடி அரண்மனை படங்கள்
Post a Comment