'சுண்டாட்டம்' படத்தை வாங்கினார் சக்சேனா!

|

Saxena Release Sundattam Movie

சாருலதாவுக்குப் பிறகு சுண்டாட்டம் என்ற படத்தை வாங்கி விநியோகிக்கிறார் 'சாக்ஸ் பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

சன் பிக்சர்ஸிலிருந்து பிரிந்து போய், சாக்ஸ் பிக்சர்ஸ் என்ற தனி நிறுவனம் தொடங்கி, புதிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார் சக்சேனா. அவர் முதலில் வெளியிட்ட படம் சாருலதா.

இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் படுத்துவிட்டது. இருந்தாலும் தன் முயற்சியில் மனம் தளராத சாக்ஸ், அடுத்து சுண்டாட்டத்தை வாங்கியுள்ளார்.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இத்தகவலை அவரே தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "இந்தப் படத்தை நேத்து இரவுதான் எனக்கு போட்டுக் காட்டினாங்க.., படம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உடனே வாங்கி என்னோட பேனர்ல ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணிட்டேன்," என்றார்.

சுண்டாட்டம் படத்தில் இர்பான் நாயகனாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே பட்டாளம் படத்தில் அறிமுகமானவர். ஆடுகளம் நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பிரம்மா ஜி தேவ் இயக்கியுள்ளார்.

 

Post a Comment