லண்டன்: நடிகை கிறிஸ்டன் ஸ்டூவர்ட், தன்னைத் திட்டியும், கடுமையாக விமர்சித்தும் எழுதப்பட்ட கமெண்டுகளைத் தேடிப் பிடித்துப் படித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறாராம்.
படு அழகான நடிகை கிறிஸ்டன் ஸ்டூவர்ட். இவரது காதலர் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். இவர்களின் காதல் வாழ்க்கை ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தபோது திடீரென இயக்குநர் ரூபர்ட் சாண்டர்ஸுடன் ரகசிய உறவு கொண்டு பாட்டின்சனுக்கு அதிர்ச்சி அளித்தார் கிறிஸ்டன்.
இதனால் பாட்டின்சன், கிறிஸ்டன் ஜோடி பிரிந்தது. இருப்பினும் மின்னல் வேகத்தில் இருவரும் சமாதானமாகி இப்போது ஒன்று சேர்ந்து விட்டனர். ஆனால் பாட்டின்சனை பிரிந்திருந்த காலத்தில் மிகவும் மனம் உடைந்து போயிருந்தார் கிறிஸ்டன். இதனால் அவர் தன்னைப் பற்றி இணையதளங்களில் வெளியான செய்திகளில், வாசகர்கள் தன்னைத் திட்டியும், விமர்சித்தும் எழுதிய கமெண்டுகளைத் தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தார். இதை ஒரு வகை தண்டனையாக அவர் கூறிக் கொண்டார்.
தான் செய்த தவறுக்காக இதை ஒரு தண்டனை போல நினைப்பதாக அவர் கூறி வந்தார். இப்போது காதலருடன் இணைந்த பிறகும் கூட இந்த கமெண்ட் படிப்பதை அவர் நிறுத்தவில்லையாம். இதனால் பாட்டின்சன் கவலை அடைந்துள்ளார். அதுதான் திரும்பச் சேர்ந்து விட்டோமே, பிறகெதற்கு தண்டனை என்று கூறி கிறிஸ்டனை அவர் சமாதானப்படுத்தியுள்ளாராம்.
இருந்தாலும் கிறிஸ்டனின் மனு ஆறவில்லையாம். நான் செய்த தவறுக்கு இதுதான் சரியான தண்டனை என்று தொடர்ந்து படித்து வருகிறாராம்...
Post a Comment