நியூயார்க்: ரூ.1,375 கோடி கேட்டு பாப் பாடகி ஷகீரா மீது அவரது முன்னாள் காதலர் ஆன்டனியோ டீ லா ருவா வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல பாப் பாடகி ஷகீரா முன்னாள் அர்ஜென்டினா அதிபர் பெர்னான்டோ டீ லா ருவாவின் மகன் ஆன்டனியோ டீ லா ருவா என்பவரை 11 ஆண்டுகளாக காதலித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தங்கள் பிசினஸ் பார்ட்னர்ஷிப் காதல் முறிவுக்கு பிறகு மோசமடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை சுமத்தி ஆன்டனியோ நீதிமன்றத்தில் ஷகீராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஷகீராவை காதலித்தபோது ஆன்டனியோ தனது வேலையை விட்டுவிட்டு காதலியின் பிசினஸ் மேனேஜர் ஆனார் காதல் முறிவுக்கு பிறகு வியாபரத்தில் கிடைக்கும் லாபத்தில் தனக்குரிய பங்கை ஷகீரா உறுதியளித்தபடி கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இதையடு்தது தனக்கு ரூ.1,375 கோடி அளி்க்கக் கோரி ஆன்டனியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஷகீராவும், ஆன்டனியோவும் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்தாலும் கடந்த ஜனவரி மாதம் வரை அதை வெளியே தெரிவிக்கவில்லை.
Post a Comment