லாஸ் ஏஞ்சலெஸ்: ஜஸ்ட் 50 வயதேயாகும் ஹாலிவுட் முன்னாள் கனவுக் கன்னியிடம் 26 வயதே நிரம்பிய ஒரு இளைஞர் சிக்கியுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்புதான் இதேபோல இளைஞரான அஸ்டன் கட்சரிடமிருந்து பிரிந்து வந்தார் டெமி என்பது நினைவிருக்கலாம்.
டெமி மூர் கனவுக் கன்னியாக மட்டுமல்ல, கவர்ச்சிக் கன்னியாகவும் ஜொலித்தவர். இன்றும் கூட அவருக்கு செமத்தியான கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. கடந்த ஆண்டுதான் தனது காதலர் அஷ்டன் கட்சரை விட்டு விலகினார். இப்போது 26 வயதான விடோ ஸ்னாபெல் என்பவருடன் சுற்ற ஆரம்பித்துள்ளாராம்.
இவர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜூலியன் ஸ்னாபெல்லின் மகன் ஆவார். இருவரும் சேர்ந்து நவோமி கேம்பல் தனது காதலர் விலாடிமிர் டோரோனின் 50வது பிறந்த நாளுக்கு ஜோடி போட்டுப் போயிருந்தார்களாம். இந்த பிறந்த நாள் விழா இந்தியாவின் ஜோத்பூரில் நடந்தது நினைவிருக்கலாம்.
டெமியும், அவரது புதுக் காதலரும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்களாம், ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டார்ளாம், முத்தமிட்டும் கொண்டார்களாம்.
ஸ்னாபெல்லுக்கு வயசான கவர்ச்சிக் கன்னிகளைப் பிடிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காக இருந்து வருகிறதாம். இதற்கு முன்பு, அவருக்கு 21 வயதாக இருந்தபோது 44 வயதான எல்லி மெக்பெர்சன் என்ற சூப்பர் மாடல் அழகியுடன் நடை போட்டுக் கொண்டிருந்தார். அதேபோல 35 வயதான லிவ் டெய்லர் என்ற நடிகையுடனும் உலா வந்தவர்தான் ஸ்னாபெல். இப்போது 50 வயதைத் தொட்டு விட்ட டெமியுடன் டீலிங்கில் இறங்கியுள்ளார்.
டெமியை விட்டுப் பிரிந்த கட்சர் தற்போது அமெரிக்க டிவி நடிகையான 29 வயதான மிலா குனிஸுடன் புது உறவில் ஈடுபட்டுள்ளார் என்பது கொசுருச் செய்தி.
டெமியின் ஒரே கணவர் ப்ரூஸ் வில்லிஸ் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். இந்த இருவரும் 1998ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். டெமிக்கு, ப்ரூஸ் மூலம் 3 மகள்கள் உள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment