ஹைதராபாத்: நடிகர் மோகன்பாபு தயாரித்த ‘தேனிகைனா ரெடி' என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக உள்ளதாகக் கூறி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மோகன் பாபு மகன் மஞ்சு விஷ்ணு, ஹன்சிகா நடித்து, நாகேஷ்வர ரெட்டி இயக்கிய படம் இது.
ரூ. 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பிராமணர்களை நையாண்டி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் படத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டின் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால் சர்ச்சைக்குரிய காட்சி எதுவும் படத்தில் இல்லை என்று மோகன்பாபு மறுத்துள்ளார்.
இருப்பினும் அந்த சமூகத்தினர் இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், நடிகர் மோகன்பாபு, நடிகர் மஞ்சு விஷ்ணு, காமெடியன் பிரமானந்தம், இயக்குநர் நாகேஷ்வர ரெட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Post a Comment