சென்னை: விஸ்வரூபம் படம் மூவாயிரம் பிரிண்டுகள் வெளியாகவிருப்பதாலேயே இவ்வளவு தாமதமாவதாக நடிகர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கமல்- பூஜா குமார் - ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் விஸ்வரூபம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஆரோ 3டி எனும் ஒலி நுட்பத்தில் தயாராகியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்துக்கேற்ப திரையரங்குகளைத் தயார்ப்படுத்தும் பணி நடக்கிறது. தமிழகம் தவிர, கேரளா, ஆந்திராவிலும் இப்படி அரங்குகளை மேம்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து கமல் கூறுகையில், "பொதுவாக நமது பக்கவாட்டில் இருந்துதான் சப்தம் கேட்கும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதால், மேல் தளத்திலிருந்து உங்களுக்கு சப்தம் கேட்கும்.
இதுவரை இந்த வாய்ப்பை நான் அமெரிக்கத் திரையரங்குகளில் மட்டுமே அனுபவித்துள்ளேன். இனி தமிழகத்திலும் இந்த வாய்ப்பு கிட்டும் என்பது பெருமையாக உள்ளது. அதனைக் கேட்கும் போதுதான் நீங்கள் உணர்வீர்கள்.
படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஏன் என்றால், ஒரே சமயத்தில் ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதற்காக 3000 பிரிண்ட் போடப்பட வேண்டும். அதற்காகவே வெளியீடு தள்ளிப்போயுள்ளது," என்றார்.
Post a Comment