இயக்குநராகும் யுவன் சங்கர் ராஜா!

|

Yuvan Direct Movie

இசையமைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

யுவனின் தந்தை இசைஞானி இளையராஜா, ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். ஆரம்பத்தில் சகோதரர் பாஸ்கருடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்ட அவர், பின்னர் தனியாக இளையராஜா பிக்சர்ஸ் என்ற பெயரில் சில படங்களைத் தயாரித்தார்.

இடையில் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.,

தந்தையைப் போலவே மகன் யுவன் சங்கர் ராஜாவும் தயாரிப்பில் ஈடுபட விரும்பி, செல்வராகவனுடன் இணைந்து ஒயிட் எலிபென்ட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திட்டத்தைக் கைவிட்டார்.

இப்போது பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடும் யுவன் சங்கர் ராஜா, அடுத்து தன் சொந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.

தான் இயக்கப் போகும் படத்தில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கார்த்திக் ராஜா ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும், தந்தை இளையராஜா விரும்பினால் இசையமைப்பார் என்றும் கூறியுள்ளார்.

தான் இயக்கும் கதை விவாதத்திலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார் யுவன். ஆனால் இசையமைப்புதான் முழுநேர பணி என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment