எடுத்ததெற்கெல்லாம் 'கேஸ்' போட்டால்... சின்மயிக்கு சிம்புவின் அட்வைஸ்!

|

Simbu S Advice

சென்னை: திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து மக்களும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி பலரும் கருத்து தெரிவிப்பது சகஜம்தான். இதற்கெல்லாம் நாம் புகார் கொடுப்பது என்பது சரியாக இருக்காது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது வேலையை நாம் சரியாக பார்த்தாலே போதும் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

பாடகி சின்மயி, சமீபத்தில் போலீஸ் வரை போய் கொடுத்த புகார் குறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

சமூக வலைதளங்களில் திரையுலகினரைப் பற்றி கருத்து தெரிவிப்பது சாதாரணமான விஷயம். நகைச்சுவையான கருத்துகள், சீரியசானவை என பலவித கருத்துகள் பகிரப்படும். ஆனால் அவை புகார் அளிக்கும் அளவிற்கு சீரியசான விஷயம் கிடையாது.

ஏன் நம் மக்கள் ஒவ்வொரு நடிகர்களை போலவும் மிமிக்ரி செய்து பலவிதமாக பேசுகிறார்கள். திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

இண்டர்நெட்டில் இருப்பவர்களில் 5 சதவீதம் மக்கள் தான் இதை செய்கிறார்கள். அவர்களின் பேச்சை சீரியசாக எடுத்துக்கொண்டால் நமக்குத் தான் மனஉளைச்சல். இதையெல்லாம் பெரிய பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல் நாம் நம் வேலையை பார்த்தால் மட்டும் போதும் என்றார் சிம்பு.

நல்ல கருத்துதான்.

 

Post a Comment