சட்டம் ஒரு இருட்டறை விளம்பரத்துக்கு சுற்றுப்பயணம்

|

சென்னை : தமன், ரீமாசென், பியா, பிந்து மாதவி நடிக்கும் படம், 'சட்டம் ஒரு இருட்டறை'.  இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் இயக்குனர் சினேஹா பிரிட்டோ கூறியதாவது: பழைய படத்தில் இருந்து கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்துள்ளோம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு பலமாக இருக்கும். ரீமாசென் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தமன், பியா, பிந்து மாதவிக்கான காட்சிகளில் இளமையும், காதலும் துள்ளும். ஈரோடு மகேஷ் காமெடி வேடத்தில் அறிமுகமாகிறார்.

 ரீமாசென் பங்கேற்ற சேஸிங் காட்சியை அதிக சிரமத்துக்கிடையே படமாக்கினோம். டைரக்ஷன் என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். முதலில் இப்படத்துக்கு 'தோழன்' என்று பெயரிட்டோம். அந்த காலகட்டத்தில் சாதனை படைத்த 'சட்டம் ஒரு இருட்டறை' பெயரே சிறப்பாக இருந்ததால், அதையே வைத்துவிட்டோம். படத்தை விளம்பரப்படுத்த திருச்சி, சேலம், மதுரை, கோவை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சினேஹா பிரிட்டோ கூறினார்.

 

Post a Comment