'துடைச்சுப் போடும்' பேப்பர்தான் ஆண்கள்... சோனாவுக்கு எதிராக ஆண்கள் கொந்தளிப்பு!

|

Tn Men Welfare Association Warns Sona

சென்னை: துடைத்துப் போடும் டிஷ்யூ பேப்பர் மாதிரிதான் ஆண்கள்.அவர்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் வீணானது என்று பேசியுள்ள நடிகை சோனா வீட்டு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 19ம் தேதி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாம். சோனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ஆண்கள், டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள். திருமணம் என்பது முட்டாள்தனமானது; ஆண்களோடு சேர்ந்து வாழ்வது என்பது அதை விட முட்டாள்தனமானது என்று கூறியிருந்தார். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வாரப் பத்திரிகை ஒன்றிற்கு கவர்ச்சி நடிகை சோனா அளித்த பேட்டியில், ஆண்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாக, கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக, கடைபிடிக்கும் திருமண முறையையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவுப்படுத்தும் வகையில், அவரது கருத்து அமைந்துள்ளது.

அவர், தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்று, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், உலக ஆண்கள் தினமான, இம்மாதம், 19ம் தேதி, தமிழ் மக்களை ஒன்று திரட்டி, சோனாவின் வீடு முற்றுகையிடுவோம். நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சோனாவை நீக்கவும், ‌கோரிக்கை விடுப்போம் என்று எச்சரித்துள்ளனர்.

 

Post a Comment