
சென்னை : 'உள்ளத்தை அள்ளித்தா', 'அருணாச்சலம்', 'கலகலப்பு' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், யு.கே.செந்தில்குமார். இவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார வீடியோவை, 'ஹோலோகிராப்' தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஹோலோகிராபிக் தொழில்நுட்பம், 3டியின் அடுத்த கட்டம். டிஜிட்டல் கேமராவில் இத் தொழில்நுட்பத்தில் ஒருவர் பேசுவதை படமாக்கி, திரையிட்டால் அவர் தத்ரூபமாக நேரில் நின்று பேசுவது போல் இருக்கும்.
இந்தியாவில் முதல்முறையாக இத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வீட்டில், அவர் தேர்தல் பிரசாரம் செய்யும் காட்சியை இந்த முறையில் படமாக்கினோம். மணி சங்கர் இயக்கினார். குஜராத்தி மொழியில் அவர் பேசியதை திரையிட்டுக் காட்டியபோது, மோடியால் நம்பமுடியவில்லை. எங்கள் டீமை பாராட்டினார்.
Post a Comment