சென்னை : கிளாமர் இமேஜில் இருந்து விடுபட நினைக்கிறேன் என்று லட்சுமி ராய் கூறினார். பி.டி.செல்வகுமார் இயக்கும் 'ஒன்பதுல குரு' படத்தில் வினய்யுடன் நடித்து வருகிறார் லட்சுமிராய். இதன் படப்பிடிப்பில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, கன்னடம் மலையாளத்திலும் நடித்து வருகிறேன். மங்காத்தா, காஞ்சனா போன்ற ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் கிளாமர் இமேஜ்தான் ஏற்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்பதற்காக அதுமாதிரியான கதைகளில் நடிக்கவில்லை. விதவிதமான கேரக்டர்களில் நடித்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.
அதனால் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். 'ஒன்பதுல குரு' படத்தில் கிளாமருடன் கலந்த காமெடி கேரக்டர். நான்கு நண்பர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் பெண்ணாக நடிக்கிறேன். என் அளவுக்கு கிசுகிசுவில் சிக்கியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இப்போது அதிலிருந்து விலகி இருக்கிறேன். இப்போது சினிமா தவிர வேறெதையும் சிந்திக்கவில்லை. எனது அக்கா அஸ்வினி ராயுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்து என் திருமணம்தான். நிச்சயம் காதல் திருமணம்தான். எனக்கு முழு சுதந்திரமும் கொடுக்கிற, என்னை புரிந்து கொண்டு அன்பு செலுத்துகிறவர் கிடைத்தால் உடனே திருமணம்தான்.
Post a Comment