அடுத்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்கிறார் வடிவேலு. தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து அமைதி காத்தவர், இப்போது ஒரு பேட்டியில் அவரே முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
ஏன் இத்தனை பெரிய இடைவெளி.. அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வடிவேலு, "ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது. அதிரடிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன்.
நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட 'புலிகேசி - பார்ட் 2'. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம்.
அடுத்தடுத்து, ரவிக்குமார் சாரோட 'ஆப்பிரிக்காவில் வடிவேலு', யுவராஜோட 'தெனாலிராமன்', அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவாவோட 'உலகம்'. எழுதிக்குங்க... வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!'', என்று பதிலளித்துள்ளார்.
வடிவேலு ரசிகர்களுக்கு உண்மையிலேயே நல்ல செய்திதான்!