பத்திரிகை ஒன்றில் என்னை ஜாலி பேட்டி ஒன்று எடுத்தார்கள். அவர்கள் ஜாலியாக கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். ஆனால் நான் சொல்லாததையும் எழுதி என்னை சிக்கலில் மாட்டிவிட்டார்கள். ஆண்களுக்கு எதிராக நான் தவறான கருத்தை சொன்னதாக எழுதிவிட்டார்கள். சில அமைப்புகள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் எனது கடையை திறக்க முடியவில்லை. தீபாவளி வியாபாரம் முடங்கி பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நான் புதிதாக வாடகைக்கு குடிபோக இருந்த வீட்டுக்காரர், அட்வான்சை திருப்பித் தந்து, வீடு தர மறுத்துவிட்டார். சில இடங்களில் எனது கடையின் கிளையை திறக்க ஏற்பாடு செய்திருந்தேன். அவை அனைத்தும் முடங்கிவிட்டது. எல்லாவற்றையும் விட, கடந்த சில நாட்களாக மனவேதனையில் தவிக்கிறேன். தேவையில்லாத சர்ச்சையில் என்னை சிக்க வைத்து, என் வாழ்வையே சிக்கலாக்கி விட்டார்கள். சொந்தமாக படம் தயாரித்து பலகோடியை இழந்து இப்போதுதான் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது வளர்ச்சியை தடுக்கவும், என்னை அழிக்கவும் யாரோ திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என்று கருதுகிறேன். நான் எதையும் வெளிப்படையாக பேசுகிறவள். எனக்கு நண்பர்கள் அதிகம், எதிரிகளும் இருக்கிறார்கள் என்பதை இப்போதான் உணர்கிறேன். அவதூறாக எழுதிய சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
Post a Comment