சினிமா தலைப்புக்கு லட்சக்கணக்கில் பேரம் கெஸ்ட் இயக்குனர் புகார்

|

சென்னை : மூர்த்தி ஸ்ரீனிவாசலு, திருமால் ரெட்டி தயாரிக்கும் படம், 'கெஸ்ட்'. ஹரிஷ் கல்யாண், பூனம் கவுர் ஜோடி. ராஜ்,ககனி இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சரத்குமார் வெளியிட, லிங்குசாமி பெற்றார். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குனர் ராஜா கார்த்திக் கூறியதாவது:

காதலிக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறவர்கள், திருமணத்துக்கு பிறகு புரிந்து கொள்வதில்லை. காரணம் இருவருமே வேலைக்குச் செல்வதால் மனம்விட்டு பேசும் சந்தர்ப்பங்கள் குறைந்து விடுகிறது. இந்த இடைவெளியை தவறானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உண்மையை படமாக்கியிருக்கிறோம். படத்துக்கு முதலில் 'அக்கம் பக்கம்' என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம். ஆனால், இந்த தலைப்பை சினிமாவுக்கு தொடர்பில்லாதவர்கள் கில்டில் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

தலைப்பை விட்டுக் கொடுக்க, 2 லட்சம் வரை பேரம் பேசினார்கள். அதை கொடுக்க விரும்பாததால் 'கெஸ்ட்' என்று பெயர் வைத்துள்ளோம். கில்டு நல்ல அமைப்பு. அதில் 2ஆயிரத்து 700 ரூபாய் கட்டி உறுப்பினராகி, 500 ரூபாய் கொடுத்து தலைப்பை பதிவு செய்து, அதை லட்சக் கணக்கில் விற்பனை செய்கிறார்கள். பாரம்பரிய அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Post a Comment