பாலிமர் டிவியில் சாப்பாட்டு ராமன் ருசியான நிகழ்ச்சி

|

Polimer Tv Cookery Show Sappatu Raman

சமைப்பது எப்படி ஒரு கலையோ அதேபோல சாப்பிடுவதும் ஒரு கலைதான். டிவிகளில் சமையல் நிகழ்ச்சிகளில் சமைப்பதை ஒளிபரப்புவார்கள். ஆனால் பாலிமர் டிவியில் சாப்பாட்டு ராமன் என்ற நிகழ்ச்சயில் சாப்பிடுவதை ஒளிபரப்புகின்றனர். சுவையான சாப்பாடு கிடைக்கும் இடங்களுக்குச் சென்று சாப்பிட்டு அதன் சுவையை நேயர்களுக்கு விளக்குகிறார் நிகழ்ச்சி நடத்துனர் ஜேக்கப்.

ஸ்டார் ஹோட்டல் முதல் மெஸ்வரை இவர் சுவைத்துப் பார்க்காத உணவே இல்லை. பாரம்பரிய உணவுகளில் தொடங்கி சைவம், அசைவம் என அனைத்து வகை உணவுகளையும் ஒரு கை பார்க்கிறார் இந்த சாப்பாட்டு ராமன். சமையலின் சுவைக்கான பாரம்பரியம் பற்றி ஹோட்டல் நிறுவனர்கள் நேயர்களுக்கு டிப்ஸ் தருகின்றனர்.

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் விவிஐபிக்களின் சமையல் இடம்பெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள், சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வீடுகளில் சமைப்பதை சுவைத்து நேயர்களுக்கு சொல்கிறார் ஜேக்கப். இசை அமைப்பாளர் ஆதித்யன் வீட்டில் கொத்தமல்லி ப்ரைடு ரைஸ் செய்து காண்பித்தார். அதை ஜேக்கப் சாப்பிடும்போதே பார்ப்பவர்களுக்கும் பசிக்க ஆரம்பித்துவிடுகிறது. சமைப்பதை பார்த்து சலித்துப்போனவர்கள் கொஞ்சம் சாப்பிடுவதையும் பார்க்கலாம்.

 

Post a Comment