ரஜினியின் புதுப்படம்.. இன்னுமொரு புதுப் புரளி!!

|

It Is Another Rumour On Rajini Ma

ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது என்றும், இந்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என்றும் வெளியான தகவல்கள் அக்மார்க் டுபாக்கூர் என ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இப்போது கோச்சடையானில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது அடுத்த படம் குறித்து கே வி ஆனந்திடம் மட்டுமே இதுவரை ஆலோசித்துள்ளார். இதனை கேவி ஆனந்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இடையில் துப்பாக்கி வெற்றி காரணமாக ஏஆர் முருகதாசுக்கு ரஜினி ஒரு வாய்ப்பு வழங்கக் கூடும் என மீடியாவே கிளப்பிவிட்டுவிட்டது. அதற்கு முன்பு, ராஜமவுலிதான் ரஜினியின் அடுத்த இயக்குநர் என்று ஒரு கோஷ்டி அம்மன் கோயிலில் சத்தியம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது.

இதெல்லாம் கப்ஸா என்று இப்போது அம்பலமாகிவிட்டது.

இந்த சூழலில், ரஜினியின் அடுத்த படத்தை மணிரத்னம்தான் இயக்கப் போகிறார் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் நாயன் படம் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடியபோது, கமலும் மணிரத்னமும் உடனடியாக புதிய படம் தொடங்குகிறார்கள்.. கதை விவாதம் ஆரம்பித்து காரசாரமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றெல்லாம் அடித்துவிட்டது நினைவிருக்கலாம்.

இப்போது தோசையை அப்படியே ரஜினி பக்கம் திருப்பிப் போட்டுள்ளனர்.

ரஜினி தரப்பில் இதுகுறித்து விசாரித்த போது, "எவ்வளவோ எழுதிவிட்டார்கள். அதில் இதுவும் ஒண்ணு. தன் அடுத்த பட இயக்குநர் யார் என்று எந்த மீடியாவுக்கும் ரஜினி சின்ன க்ளூ கூட கொடுத்ததில்லை. அதை தனது தயாரிப்பாளருடனும் நெருங்கி நண்பர்கள் சிலரிடமும் மட்டும்தான் பகிர்ந்து கொள்வார். ஆனால் இன்னும் 6 மாதங்கள் கழித்துதான் தன் புதிய படத்தை தயாரிப்பாளர் மூலம் அவர் அறிவிப்பார்," என்றார்.

 

+ comments + 5 comments

arun
29 November 2012 at 18:41

superstar rockzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

sathish
29 November 2012 at 18:42

thalapathy rajni valga

siva
29 November 2012 at 18:42

thalaivar rajni rockzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

praveen
29 November 2012 at 18:43

thanga thalaivan rajnikanth

deena
29 November 2012 at 18:44

only one superstar ............rajni

Post a Comment