சென்னை: மங்காத்தா படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. தமிழில் கலக்கிய அஜீத்தை இந்தியிலும் நடிக்க வைக்க அவர் விரும்புகிறாராம். ஆனால் அர்ஜூன் நடித்த வேடத்தில் அஜீத்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம்.
அஜீத்தின் 50வது படம் மங்காத்தா. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜீத் ஆன்டி ஹீரோ பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். திரிஷா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் படத்தில் கலாய்த்திருந்தனர். லட்சுமி ராய்க்கு கவர்ச்சிகரமான பாத்திரம்.
இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. இதிலும் அஜீத்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம். இதை அஜீத்திடமே சொல்லி விட்டாராம். அதேசமயம், இந்தி மங்காத்தாவில், தமிழில் அர்ஜூன் நடித்திருந்த அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைக்க விரும்புகிறாராம் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபுவின் விருப்பத்திற்கு அஜீத் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அடுத்து தான் நடிக்கப் போகும் புதிய படத்தை முடித்த பிறகே அஜீத் வர முடியும் என்று தெரிகிறது. வெங்கட் பிரபுவும் பிரியாணி படத்தில் அடுத்து பிசியாகவுள்ளதால் இப்போதைக்கு இந்தி மங்காத்தா வேகம் பிடிக்காது என்றே தெரிகிறது.
ஓ.கேஜி..!
Post a Comment