அபிராமி மெகா மால் நிறுவனம் முதன் முதலாக சிறு பட்ஜெட் படங்களுக்கான விருதுகளை வழங்கியது. மலேசியாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வரவேற்றுப் பேசிய அபிராமி ராமநாதன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை தன்னுடைய குருநாதர் என்றார். நடிகை சரோஜா தேவியை கனவுக் கன்னி என்று கூறிய ராமநாதன், தன்னுடைய மனைவி சரோஜா தேவி மாதிரி இருப்பதாக கூறினார்.
அபிராமி விருதுகள் நிகழ்ச்சி ஜெயா டிவியில் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பானது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக நடைபெற்ற விழாவில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், பின்னணிப் பாடகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை நண்டு ஜெகன், பூர்ணிதா தொகுத்து வழங்கியவர்கள்.
சிறந்த திரைப்படங்களுக்கான விருது பதினாறு, வாகை சூடவா படங்களுக்கு வழங்கப்பட்டன. சதுரங்கம் படத்தில் நடித்த ஸ்ரீகாந்த்துக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த புதுமுகநடிகர் விருது எங்கேயும், எப்போதும் படத்தில் நடித்த ஷர்வானந்த்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக நடிகை விருது வாகைசூடாவா படத்தில் நடித்த இனியாவிற்கு கிடைத்தது.வாழ்நாள் சாதனையாளர் விருதினை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும், நடிகை சரோஜா தேவியும் பெற்றனர்.
வழக்கமாக, டிவி சேனலோ, பத்திரிக்கையோதான் திரைப்படத்துறையினருக்கு விருது வழங்கும் விழா நடத்துவார்கள். முதல்முறையாக அபிராமி மெகா மால் நிறுவனத்தினர் சிறு பட்ஜெட் படங்களை ஊக்குவிக்கும் விதத்தில் விருது நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment