மும்பை: பாலிவுட் நடிகை மனீஷ் கொய்ராலாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா அண்மை காலமாக அவரது சொந்த ஊரான காத்மாண்டுவில் தான் அதிக நேரம் செலவிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு புட் பாய்சனிங் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து தான் அவரது உறவினர்கள் அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பைக்கு அழைத்து வந்து அங்குள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது தாய் சுஷ்மா அவருக்கு துணையாக மருத்துவமனையில் உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த மனீஷா திருமணத்திற்கு பிறகு அம்மா வேடத்திற்கு வந்துவிட்டார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனீஷா கொய்ராலாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் குடிப் பழக்கத்தை விட்டுவிட்டதாக அறிவித்தார்.
Post a Comment