விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அவருடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி நடித்து வருகின்றனர்.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. இந்த படத்துக்காக நேற்று ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு தாவுவது போல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்து. இதில் டூப் வேண்டாம்... நானே நடிக்கிறேன் என பிடிவாதமாக நடித்தார் அஜீத்.
கிட்டத்தட்ட 25 அடி தூரத்துக்கு மேல் ஒரு காரிலிருந்து அடுத்த காருக்கு அவர் தாவினார். அப்படி தாவி இன்னொரு காரின் பேனட் மீது விழுந்த போது, அவரது வலது கால் முன்பக்க டயரில் சிக்கியது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.
உடனே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இயக்குநர் வேறு நடிகர்களை வைத்து காட்சியை எடுக்க விரும்பினாலும், வலியை பொறுத்துக் கொண்டு தானே அந்த சண்டைக் காட்சியில் நடித்து முடித்தார் அஜீத்.
Post a Comment