இதுபற்றி இயக்குனர் விஜய் ஆதிராஜிடம் கேட்டபோது,'பட புரமோஷனுக்கு வரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருப்பது நிஜம்தான். முதலில் ஆடியோ கேசட் விழா சத்யம் தியேட்டரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் விஜய்யின் 'துப்பாக்கி' ரிலீசையொட்டி தியேட்டர் கிடைக்கவில்லை. இதனால் வேறு தேதியில் நட்சத்திர ஓட்டலில் விழா நடத்த ஏற்பாடானது. இந்த தேதியில் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங் மும்பையில் இந்தி பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக கூறினார். அதற்கு சம்மதித்தேன். அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ச்சியில் அவர் பேசுவதாக இருந்தது. தொழில்நுட்ப பிரச்னை காரணமாக அதை செய்ய முடியவில்லை. இப்படம் மேன்ஷனில் தங்கி இருக்கும் 3 இளைஞர்களை பற்றிய கதையாக உருவாகி உள்ளது. டிவி நிருபராக ரகுல் நடிக்கிறார்' என்றார்.ரகுல் ப்ரீத் சிங் கூறும்போது, 'புத்தகம் படத்தில் நல்ல கேரக்டர். இந்தியில் நடித்தாலும் தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை. ஆடியோ விழாவில் பங்கேற்க முடியாததற்கு இயக்குனரிடம் முன் அனுமதி வாங்கி இருந்தேன்' என்றார்.
Post a Comment