புதிய தலைமுறை டிவியில் இருந்து 24 மணிநேர ஆங்கில செய்திச் சேனலும், ‘யுவா' என்ற பொழுதுபோக்குச் சேனலும் உதயமாக உள்ளது எஸ்ஆர்எம் குழுமத்தில் இருந்து வேந்தர் டிவி ஒளிபரப்பாக உள்ளது அனைவரும் அறிந்ததே. இது முழுக்க முழுக்க இந்திய ஜனநாயக கட்சிக்கு ஆதரவான செய்திகளை ஒளிபரப்பும். இதற்கும், புதிய தலைமுறை டிவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
அதேசமயம் புதிய தலைமுறை டிவியில் இருந்து மேலும் இரண்டு டிவி சேனல்கள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 24 மணிநேர ஆங்கில செய்திச்சேனல் ஒன்றும், முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘யுவா' சேனலும் ஜனவரி முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே புதிய தலைமுறை செய்திச்சேனல் சன் நியூஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் ‘யுவா' சேனல் சன்டிவி, கேடிவிக்கு போட்டியாக உருவாகும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் எஸ்ஆர்எம் குழுமத்தில் இருந்து புதிதாக 3 சேனல்கள் தனது ஒளிபரப்பை விரைவில் துவங்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment