முத்தமிட பயந்த விஷ்ணு

|

சென்னை : 'நீர்ப்பறவை' படத்தில் நடித்துள்ள விஷ்ணு, கூறியதாவது: இந்தப்படத்தில் கதைதான் ஹீரோ. நான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். என்னைப்போல் மற்ற நடிகர், நடிகைகளும் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். அருளப்ப சாமி என்ற கேரக்டரில் என்னைப் பார்க்கும்போது, நடித்தது போன்றே தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக சீனு ராமசாமி என்னை நடிக்க வைத்துள்ளார்.

இப்படம் எனக்கு திருப்புமுனையாக அமையும். ஜோடியாக நடித்த சுனேனாவும் சிறப்பாக நடித்துள்ளார். 'தேவன் மகளே' பாடல் காட்சியில் சுனேனாவும், நானும் அதிக தடவை முத்தமிட்டு நடிக்க வேண்டியிருந்தது. முதலில் நான் பயந்தேன். பிறகு சுனேனாவும் தைரியமூட்டினார். இதனால் எதிர்பார்த்தபடி அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. மணப்பாடு, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு விஷ்ணு கூறினார்.
 

Post a Comment