தமிழில் பேசுவதில் சந்தோஷம் - பெங்களூரில் இஷா தியோல் பேட்டி

|

சென்னை: எப்போதும் என் தாய்மொழியான தமிழில் பேசுவதைத்தான் நான் விரும்புகிறேன். என் வீட்டில், என் பணியாளர்களிடம் தமிழில்தான் பேசுகிறேன், என்கிறார் நடிகை இஷா தியோல்.

நடிகை ஹேமமாலினியின் மகள் இஷா தியோலும், அவருடைய கணவர் பரத் தக்தானியும் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக பெங்களூர் வந்தார்கள்.

அப்போது இஷா தியோல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், " திருமண வாழ்க்கையை நான் சந்தோஷமாக அனுபவிக்க விரும்புகிறேன். சினிமா வாய்ப்புகளை ஒப்புக் கொண்டால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போகும். எனவே சில மாதங்கள் நான் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்.

ஆனால் நடிப்பு என் ரத்தத்தில் ஊறிப் போனது. எனவே தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். கொஞ்ச நாள் கழித்து நல்ல வாய்ப்புகள் ஏதும் வந்தால் மீண்டும் நடிப்பேன்.

தமிழில்தான் பேசுகிறேன்...

பெங்களூர், எனக்கு பிடித்த நகரங்களில் ஒன்று. அதேபோல நான் எப்போதும் என் தாய்மொழியான தமிழில்தான் பேசுகிறேன். என் கார் டிரைவர்களிடம் தமிழில்தான் பேசுகிறேன். மொழி புரியாமல், என் கணவர் என்னை ஆச்சரியமாக பார்க்கிறார். ‘எனக்கும் தமிழ் கற்றுக் கொடுங்கள்' என்று டிரைவர்களிடம் அவர் கேட்கிறார்,'' என்றார்.

அடடா கேக்க நல்லா இருக்கே..!

 

Post a Comment