மும்பை: நடிகை இலியானா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த வசதியாக ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.
தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானா பர்ஃபி படம் மூலம் பாலிவுட் சென்றார். முதல் படமே ஹிட்டான சந்தோஷத்தில் இருந்த இலியானா எங்கே டோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு மும்பைக்கு போய்விடுவாரோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. இந்நிலையில் இலியானா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த வசதியாக மும்பை பந்த்ரா பகுதியில் வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார்.
இனி மும்பையில் தான் பெர்மனன்ட்டாக இருக்கப் போவதாக அவரே தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஷாஹீத் கபூருடன் சேர்ந்து ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டாலும் இன்னும் இலியானா, ஷாஹீத் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லை. ஷாஹீதுடன் சேர்ந்து பணியாற்ற இலியானா ஆர்வமாக இருக்கிறார்.
இப்படித் தான் தென்னிந்திய படங்களில் நடித்த அசின் கஜினி மூலம் பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். மேலும் ஸ்ருதி ஹாசனும் மும்பையில் ஒரு வீட்டை எடுத்து தங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment