கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயினாக நடிக்க கூடாதா? : சினேகா கோபம்

|

Why should act as heroine after marriage : Sneha angry 'கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயினாக நடிக்க கூடாதா?' என்றார் சினேகா. கிஷோர், சினேகா நடிக்கும் படம் 'ஹரிதாஸ்'. ஜிஎன்ஆர்.குமாரவேலன் எழுதி இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். வி.ராமதாஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதுபற்றி சினேகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: திருமணத்துக்கு முன்பே ஹரிதாஸ் பட கதையை என்னிடம் சொல்ல வந்தார் இயக்குனர் குமாரவேலன். அப்போதே அவரிடம், சீக்கிரமே எனக்கு திருமணம் நடக்க உள்ளது. உங்கள் பட ரிலீசுக்கு முன்பே திருமணம் ஆகிவிடும். திருமணம் ஆன நடிகை ஹீரோயினாக நடிக்ககூடாது என்ற நிலைதான் கோலிவுட்டில் இருக்கிறது.

அதனால் இப்படத்தில் நான் நடிப்பதுபற்றி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று  அவரிடம் கூறினேன். அதைக்கேட்ட அவர் அதுபோன்ற சென்டிமென்ட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கதாபாத்திரத்துக்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார். பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்று யார் சொன்ன விதியோ தெரியவில்லை. இப்பட ஹீரோ கிஷோர் தன்னைப்பற்றி  குறிப்பிடும்போது 'பேட் ஆக்டர்' என்று சொல்லிக்கொண்டார். அதை ஏற்க முடியவில்லை. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இதில் நன்றாக நடித்திருக்கிறார். தன்னை பேட் ஆக்டர் என்று அவர் குறைத்து மதிப்பிடக்கூடாது. பிருத்விராஜ்தாஸ் என்ற சிறுவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.
 

Post a Comment