ஆண்களை செக்ஸுக்கு உபயோகித்துவிட்டு துடைத்துப் போடும் டிஸ்யூ பேப்பர் என்று கேவலப்படுத்தி பேட்டி கொடுத்த பிரச்சினையில் சிக்கியுள்ள சோனா, ஆண்களிடம் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆண்கள் பாதுகாப்பு அமைப்பினர் மீது புகாரும் கொடுத்துள்ளார்.
சோனாவுக்கு எதிராக ஆண்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர ஆரம்பித்துள்ளனர். முதல் கட்டமாக ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வக்கீல் நேற்று அவதூறு வழக்குப் பதிவு செய்துவிட்டார்.
சோனாவை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சோனா தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை சோனா நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாசை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "நான் ஆண்களைப்பற்றி இழிவான கருத்து எதையும் சொல்லி பேட்டி கொடுக்கவில்லை என்று மறுத்திருந்தேன். குறிப்பிட்ட பத்திரிகை நிருபர் செய்தியை தவறாக கொடுத்துவிட்டார். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீதும், செய்தியை கொடுத்த நிருபர் மீதும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் போட்டுள்ளேன்.
ஆனால் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனது அலுவலகம் மற்றும் எனது நகை ஷோரூம் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். ராணிப்பேட்டை கோர்ட்டில் என்மீது வழக்கும் போட்டுள்ளனர். மேலும் செல்போனில் பேசி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். வெளியில் நடமாடவிடமாட்டோம் என்கிறார்கள். வெளியில் வந்தால், என்மீது கற்களை வீசுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.
இதனால் கடந்த 8 நாட்களாக நான் வெளியில் போக முடியவில்லை. எனது அலுவலகமும், கடையும் மூடியே கிடக்கிறது. எனவே எனக்கு பாதுகாப்பு கேட்டும், எனது அலுவலகம் மற்றும் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும்படியும், என்னை செல்போனில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரியும், கூடுதல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.
என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். செய்யாத தவறுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சண்டைக்கு நானும் தயார்தான்," என்றார்.
Post a Comment