பாலாவின் பரதேசி ஆடியோ ரிலீஸ்.. பாலுமகேந்திரா வெளியிட்டார்

|

சென்னை: பாலா இயக்கியுள்ள பரதேசி படத்தின் ஆடியோ இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. பாலாவின் குரு பாலு மகேந்திரா வெளியிட நடிகர்கள் விக்ரம், சூர்யா பெற்றுக் கொண்டனர்.

balu mahendra releases paradesi audio

அவன் இவன் படததிற்குப் பின்னர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. இப்படத்தில் முதல்முறையாக அவர் ராஜா குடும்பத்தை விட்டு வெளியே வந்து ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இசைக்காக கை கோர்த்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகியாக தன்ஷிகாவும் நடித்துள்ளனர். வேதிகாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். உமா ரியாஸுக்கும் முக்கியப் பாத்திரம் தந்துள்ளாராம் பாலா.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடந்தது. பாலாவின் குருவான இயக்குநர் பாலுமகேந்திரா முதல் ஆடியோ சிடியை வெளியிட அதை நடிகர்கள் விக்ரம், சூர்யா பெற்றுக் கொண்டனர். பாலாவின் முதல் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்தார், 2வது படத்தின் நாயகன் சூர்யா என்பது நினைவிருக்கலாம்.

அதர்வா முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள பரதேசி டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

 

Post a Comment