விஜயகாந்த் கட்சி நடிகர் மீது திடீர் கொலை மிரட்டல் வழக்கு

|

நெல்லை: விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த நடிகர் ராஜேந்திர பிரசாத் மீது திடீரென கொலை மிரட்டல் வழக்குப் பாய்ந்துள்ளது.

நெல்லைமாவட்டம் முக்கூடலில் பிரசித்திபெற்ற முத்து மாலையம்மன் கோவில் உள்ளது இந்த கோவில் நிர்வாகிகளாக முன்னாள் எம்பி சிவபிரகாசம் உள்ளிட்ட சிலர் இருந்தனர் .அப்போது கோவில் நிதியில் முறைகேடு நடந்ததாக நடிகர் ராஜேந்திரபிரசாத் போலீசில் புகார் செய்தார்.

ஆனால் நடவடிக்கை தாமதமானதால் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முன்னாள் எம்பி சிவபிரகாசம் உள்ளிட்ட சிலர்மீது வழக்கு பதியபட்டது.

இந்நிலையில் இந்தக்கோவில் கணக்காளர் சுப்பிரமணியன் என்பவர் முக்கூடல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அப்புகாரில் நடிகர் ராஜேந்திர பிரசாத் ஜீப் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து முக்கூடல் போலீஸார் மூன்று பிரிவின் கீழ் நடிகர் ராஜேந்திரபிரசாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த திடீர் வழக்கால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேமுதிகவின் கலை இலக்கியப் பிரிவின் செயலாளராக இருப்பவர் ராஜேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர். கடைசியாக சுறா படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார்.

 

Post a Comment