
சென்னை : பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'கும்கி'. இந்தப் படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகிறது. இந் நிலையில் பிரபு, தன் மகன் விக்ரமை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசியதாவது: விக்ரம் பிரபுவுக்கு ஆரம்பத்தில், நடிக்கும் ஆசை இல்லை. அதனால் அமெரிக்காவுக்கு படிக்கப் போனார். பிறகு அவருக்கு சினிமா ஆசை வந்து அவராகவே வாய்ப்பு தேடி, வாய்ப்பை பெற்றிருக்கிறான்.
எங்கள் குடும்ப செல்வாக்கை அவன் பயன்படுத்தவில்லை. இனியும் பயன்படுத்த மாட்டோம். தன் திறமை, உழைப்பைக் கொண்டு முன்னுக்கு வரவேண்டும். நான்கைந்து படங்களுக்கு பிறகு வேண்டுமானால் சிவாஜி பிலிம்சில் நடிக்கலாம். விக்ரம் பிரபு இப்போது அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் 'கும்கி' வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Post a Comment