சமந்தா விலகிய படத்தில் ஸ்ருதி ஹாசன்

|

Sruthi in the movie that rejected by Samantha சமந்தா விலகிய படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். தனுஷ் ஜோடியாக '3 படத்தில் நடித்த பிறகு தமிழில் புதிய படம் எதிலும் ஸ்ருதி ஹாசன் நடிக்கவில்லை. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: பிரபு தேவா இயக்கும் புதிய இந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறேன். இதையடுத்து தெலுங்கில் 2 படம், இந்தியில் மேலும் ஒரு படம் என 4 படங்களில் நடிக்கிறேன். அர்ஜுன் ராம்பால் நடிக்க நிகில் அத்வானி இயக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.

இந்த படத்தில் ஏற்றிருக்கும் வேடம் பற்றி மேலும் விரிவாக இப்போதைக்கு சொல்ல முடியாது. தெலுங்கில் 'காண்டிரீகா இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதில் ராம் ஜோடியாக நடிக்கிறேன். சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இதையடுத்து ராம் சரண் தேஜா ஜோடியாக 'எவடு என்ற படத்தில் நடிக்கிறேன் என்றார். 'எவடு படத்தில் முதலில் சமந்தா நடிப்பதாக இருந்தது பின்னர் அவர் அதிலிருந்து விலகினார். அந்த வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment