மலையாள திரையுலகில் கவர்ச்சிப் புயலாக இருப்பவர் ஸ்வேதா மேனன்(38). திருமணத்திற்கு பிறகும் கூட கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இந்நிலையில் கர்ப்பமான அவர் களிமண்ணு என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திலும் அவர் கர்ப்பிணியாக நடித்துள்ளார். படத்தில் அவர் குழந்தை பெறும் காட்சி உள்ளது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்வேதா பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். தனது படத்தில் பயன்படுத்திக் கொள்ள தனது பிரசவத்தை படமாக்க அனுமதித்தார். அதன்படி அவரது பிரசவத்தை பட்ககுழுவினர் படமாக்கினர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் பிரசவத்தை படமாக்கியது சமுதாயத்திற்கு தேவையற்ற ஒன்று என்றும், இது பெண்மையை அவமானப்படுத்தும் செயல் என்றும் கூறி எர்ணாகுளத்தைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் ஸ்வேதா மேனன், களிமண்ணு இயக்குனர் பிளஸி உள்பட 5 பேருக்கு எதிராக அங்குள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Post a Comment