சிம்பு நடிக்கும் போடா போடி படம் கடைசி நேரத்தில் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது.
சிம்பு - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த படம் இந்த போடா போடி.
சில வாரங்களுக்கு முன் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் பின்னர் டிசம்பருக்கு மாற்றப்பட்டதாகக் கூறிவிட்டனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி, அஜந்தா மற்றும் அம்மாவின் கைப்பேசி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக துப்பாக்கி 9-ம் தேதியே ரிலீசாகி, கல்லாவை சுருட்டும் முயற்சியில் இருப்பது தெரிய வந்தது.
உடனே நடிகர் சிம்பு தனது போடாபோடியையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். தியேட்டர் புக்கிங், டிக்கெட் முன்பதிவு என செம வேகமெடுத்துள்ளது போடா போடி. அதுவும் துப்பாக்கி வெளியாகும் ஒன்பதாம் தேதியே வெளியிடுகின்றனர்.
இதனால் விஜய் - சிம்பு என புதிய போட்டி எழுந்துள்ளது.
Post a Comment