அன்னை தெரசாவை அவமதிக்கும் அசைவம் படத்தை தடை செய்யக் கோரிக்கை!

|

Appeal Ban Asaivam Movie   

சென்னை: அன்னை தெரசாவை அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ள அசைவம் படத்தை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசா பேரவை தலைவரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜி.கே.தாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்னை தெரசா ஜாதி, மதம், மொழிகளை கடந்து மனித குலத்துக்கு சேவை செய்தார். அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருதும் உலக நாடுகள் நோபல் பரிசும் அளித்தன.

அவரது அப்பழுக்கற்ற பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்னை தெரசா இன்டர்நேஷ்னல் நிறுவனம் அசைவம் என்ற ஆபாச படத்தை வெளியிட்டு உள்ளது.

இது தெரசா மேல்பற்று கொண்டவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. அன்னை தெரசா பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் அசைவம் திரைப்படத்தை அரசு தடை செய்ய வேண்டும், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment