சென்னை: படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வந்த தனுஷ், இப்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார்.
இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்தபோது தனுஷுக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். தோள்பட்டை மற்றும் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட தனுஷுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனுஷின் உடல் நிலை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளது. இதையடுத்து 'மரியான்' படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.
பரத்பாலா இயக்கும் இப்படத்தில் பார்வதி மேனன் நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு நாகர்கோவிலில் மீண்டும் தொடங்கியது.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், "முதுகு தண்டு காயம் குணமான பிறகு மீண்டும் 'மரியான்' படத்தில் நடிக்க வந்துள்ளேன். நாகர்கோவில் கடற்கரை பகுதிகளில் நடக்கும் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்," என்றார்.
Post a Comment